அமெரிக்காவில் காணாமல் போன இளம் இந்திய பெண் சடலமாக மீட்பு முள்ளிநியூஸ்

அமெரிக்காவில் காணாமல் போன இளம் இந்திய பெண் சடலமாக மீட்பு



அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இந்திய வம்சாவளியான இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திய-அமெரிக்கரான 25 வயதான லஹரி பதிவாடாவின் உடல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகருக்கு அருகில் எல்லை மாநிலமான ஒக்லஹோமாவில் இருந்து 322 கிலோ மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் காலின்ஸ் நகரில் உள்ள மெக்கின்னி பகுதியில் வசிக்கும் லஹரி டல்லாஸ் சுற்று வட்டத்தில் உள்ள எல் டொராடோ பார்க்கவே மற்றும் ஹொர்டின் பௌவுல்லர்ட் பகுதியில் காரை ஓட்டிச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். 

லஹரி காணாமல் போன செய்தி உள்ளூர் அமைப்பு ஒன்றின் மூலம் சமூக ஊடங்களில் பகிரப்பட்டது. 12 ஆம் திகதி வீட்டில் இருந்து சென்ற லஹரி வீடு திரும்பாத காரணத்தினால், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். 

மேலும் ஒக்லஹோமாவில் உள்ள அவரது நண்பர்கள், லஹரியின் தொலைபேசி ஊடாக கணகாணிப்புகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

மரணத்திற்கான காரணங்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW