இறந்த தந்தையின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த மகன் முள்ளிநியூஸ்

இறந்த தந்தையின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த மகன்



இறந்த தனது தந்தையை 18 மாதங்கள் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் நெதர்லாந்தில் நடந்துள்ளது. 

82 வயதான மகன் உயிரிழந்த தனது 101 வயதான தந்தையின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்துள்ளார் 18 மாதங்களாக எவரும் அறியாதபடி அவர் தனது தந்தையின் உடலை இவ்வாறு குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்துள்ளார். 

எனினும் இறுதியில் விடயம் வெளியில் கசிந்துள்ளது. இதனையடுத்து அருகில் வசிக்கும் மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது. 

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நபரின் உடலை பொலிஸார் மீட்டுள்ளனர். 

தந்தையின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த 82 வயதான சரியாக நடக்க முடியாமல் இருந்துள்ளார். ஏன் தந்தையின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்தீர்கள் என பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

தனது தந்தையை மிகவும் நேசிப்பதாகவும் அவரை பிரிய முடியாத காரணத்தினால், உடலை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தினமும் தந்தையுடன் பேசுவதன் மூலம் மன உறுதி கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

எது எப்படி இருந்த போதிலும் அவரது தந்தை எப்படி இறந்தார் என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW