தடுப்புக் காவலில் இருந்த பெண் உயிரிழப்பு - நான்கு பொலிஸார் பணி இடைநீக்கம்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு உப பொலிஸ் பரிசோதகர், இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
