ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண் - நாடாளுமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் முள்ளிநியூஸ்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண் - நாடாளுமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்

ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண் - நாடாளுமன்றக் குழுவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்


ஜப்பானிய தடுப்புக் காவலில் வைத்து மரணமடைந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பாக தெரிவித்ததன் காரணமாக ஜப்பானிய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேல்சபையின் நீதித்துறை விவகாரக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஜப்பானிய மேல்சபையின் முழுமையான அமர்வில் உரையாற்றும் போது, மிசுஹோ உமேமுரா என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சந்தமாலி இறந்த விதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

2017ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஜப்பான் சென்ற விஷ்மா சந்தமாலி, விசா விதிகளை மீறிய குற்றத்திற்காக 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஜப்பானில் உள்ள நகோயா தடுப்பு மையத்தில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், முறையான மருத்துவ சிகிச்சை இல்லாததால் மார்ச் 06, 2020 அன்று காலமானார். 

அந்தச் சம்பவத்துடன், குடியேற்றச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் ஜப்பானில் சமூகமயப்படுத்தப்பட்டது. கடந்த 16ம் திகதி, ஜப்பான் எதிர்க்கட்சி உறுப்பினர் மிசுஹோ உமேமுரா, குடியேற்ற கட்டுப்பாடு மற்றும் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான திருத்த மசோதா மீதான குழு விவாதத்தின் போது, யாரோ ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு விஷ்மா இறந்ததாகக் கூறினார்.

"உண்ணாவிரதப் போராட்டத்தால் அவர் இறக்கலாம், உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் அவர் காட்டிய சூழ்நிலைக்கும் தொடர்பு இருக்கிறது. அதை எதிர்கொண்ட நபரிடமிருந்து நீங்கள் சரியாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இப்போது அவள் இறந்துவிட்டார்." என குறப்பிட்டிருந்தார். 

இந்த அறிக்கை தொடர்பில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும் நிப்பான் இஷின் கட்சியின் செயலாளர் நாயகம் புமிடேக் புஜிதா, இந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் நீதித்துறை விவகாரங்களுக்கான குழுவின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், அவரது கருத்துக்காக கட்சியின் பொதுச் செயலாளர் விஷ்மாவின் குடும்பத்தினர் மற்றும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW