கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 500 கிலோகிராம் நிறையுடைய விமானக் குண்டு மீட்பு முள்ளிநியூஸ்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 500 கிலோகிராம் நிறையுடைய விமானக் குண்டு மீட்பு



கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த குண்டு, தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமிக்கு கொட்டப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கையில், தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சக்திவாய்ந்த குண்டு மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்குவைத்து கிபீர் விமானத்தால் கீழே கொட்டப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. 

3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்ட இந்த குண்டு, இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி கொட்டப்பட்டது எனவும் பூமிக்கு அடியில் அக்குண்டு பதிந்தமையால், இரும்புக்கரல் பிடித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW