மனைவியின் முடியை மொட்டையடித்த இலங்கை கணவர்
இலங்கையை சேர்ந்த நபரொருவர் இங்கிலாந்தின் மென்சஸ்டர் பகுதியில் தனது மனைவியின் தலைமுடியை மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
45 வயதான கலாந்தர் நிப்ராஸ் என்ற இந்த இலங்கையரும், அவரது மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றனர்.
இதன்பின்னர் 2007ஆம் ஆண்டு மென்சஸ்டரில் குடியேறியுள்ளனர்.
திருமணமான காலம் முதலே அவர் அவருடைய மனைவியை கொடுமைபடுத்திவந்ததாகவும் தற்போது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், இடுப்புப்பட்டியினால்(Belt) தாக்கியதாகவும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
தமது மனைவி தொழில் செய்து வந்தபோதும், கணவரான இலங்கையர் தொழில்களில் ஈடுபடவில்லை.
இந்தநிலையில், தீய பழக்கங்களில் இருந்தும் மோசமான நண்பர்களிடம் இருந்தும் கணவரை காப்பாற்றும் முயற்சியின்போதே குறித்த பெண், அவரது கணவரால் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
