சுற்றுலா விடுதியில் அநாகரிமாக நடந்து கொண்ட சிறுமிகள் உட்பட ஆறு பேர்கைது முள்ளிநியூஸ்

சுற்றுலா விடுதியில் அநாகரிமாக நடந்து கொண்ட சிறுமிகள் உட்பட ஆறு பேர்கைது



பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் போதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் கைது பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சிறுமிகளும், ஆண் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் மற்றும் இரண்டு இளைஞர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சுற்றுலா விடுதி ஒன்றிற்கு அருகில் குழுவொன்று அநாகரீகமாக நடமாடுவதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி இவர்களை கைது செய்துள்ளனர். 

அநாகரிகமாக நடந்துகொண்ட குறித்த குழுவினர், தப்பியோட முயற்சித்த நிலையிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சிறுமிகளும் நாகரீகமற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும், அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தயங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW