குடைசாய்ந்த பௌசர் - எரிபொருளை சேகரிக்க விரையும் மக்கள்
ஹப்புத்தளை - பத்கொட பிரதேசத்தில் இன்று அதிகாலை எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று பாறையில் விழுந்துள்ளது.
சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
33,000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற இந்த பௌசர் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி உயரமான குன்றின் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பவுசர் வீடொன்றின் மீது விழுந்து வீடொன்றும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பௌசரில் இருந்து எரிபொருள் கசிவதால், அதனை சேகரிக்க பிரதேச மக்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
