சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 06 பேர் கைது... முள்ளிநியூஸ்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 06 பேர் கைது...

கைது செய்யப்பட்டவர்களில் 02 ஆண்கள் (படகுத் தலைவர் உட்பட), 01பெண் மற்றும் 03 குழந்தைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது




சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு குடியேறியதாக சந்தேகிக்கப்படும் 06 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

கடல் வழியாக செல்லும் போதான தேடுதல் நடவடிக்கையின் போதே கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர். மேலும், iகது செய்யப்பட்டவர்கள் மன்னார் எருக்குளம்பிடி, பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து டிங்கி படகு ஒன்றையும் கைப்பற்றியதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர். 

தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக செல்பவர்களை அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமையான ஒன்று னவும் குறிப்பிட்டுள்ளர். குடியேற்றம் சம்பந்தப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு கடுமையான விளைவுகளை எண்ணாது இவ்வாறு சட்டவிரோதமாக பலர் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் 02 ஆண்கள் (படகுத் தலைவர் உட்பட), 01பெண் மற்றும் 03 குழந்தைகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர்கள் வவுனியா மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்கடையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW