ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் - ஜனாதிபதி முள்ளிநியூஸ்

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் - ஜனாதிபதி

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. 



வட மேல் மாகாண ஆளுநர் அத்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு அப்பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. தனக்கு ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறிவித்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் தனக்கு அந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் தொலைபேசி ஊடாக அது அறிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். 

அவ்வாறான நிலையில் அத்மிரால் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கும், வட மேல் மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத்தின் உயர் மட்டம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் வசந்த கரன்னாகொட தொடர்பில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டுள்ளது. 
அவர் மாகாண சபையை இராணுவ ஆட்சியாக மாற்றுவதாக இதன்போது பேசப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு அவருக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வசந்த கரன்னாகொடவுக்கு அமரிக்கா விதித்துள்ள தடையும் இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படுகின்றது. இந்நிலையில், அனுராதா யஹம்பத் இராஜினாமா செய்தால், கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை நியமிக்க அரசாங்க உயர் மட்டம் பேசி வருவதாக அறிய முடிகின்றது. 

இது தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதில் ஐ.தே.க. மூத்த உறுப்பினர் ஜோன் அமரதுங்கவை வட மாகாணத்துக்கு ஆளுநராக நியமிப்பது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW