புத்தர் சிலைக்கருகே சிசுவை கைவிட்டு சென்ற தாய் கைது............
பாதையின் இரு ஓரங்களிலும் இருந்த சி.சி.ரி.வி. பதிவுகளை மையப்படுத்தி விசாரணை செய்து பொலிஸார் தாயைக் கைது செய்துள்ளனர்.
கண்டி வத்துகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்கடுவ வீதியில் அமைந்துள்ள மலியதேவ வீதி விகாரையின் முன்பாக அமையப் பெற்றுள்ள புத்தர் சிலைக்கு அருகே சிசு ஒன்றினை கைவிட்டு சென்றதாக கூறப்படும் தாயை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
மாத்தளை உக்குவலை பகுதியைச் சேர்ந்த 38 வயதான திருமணமான பெண் ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்......
குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே இரு பிள்ளைகள் இருக்கும் நிலையில், ஐந்து நாட்களேயான கைவிடப்பட்ட இந்த சிசு மூன்றாவது பிள்ளை என பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
