மலையகத்தில் செய்ததை கிழக்கிலும் செய்வேன் : ஆளுநர் செந்தில் தொண்டமான் முள்ளிநியூஸ்

மலையகத்தில் செய்ததை கிழக்கிலும் செய்வேன் : ஆளுநர் செந்தில் தொண்டமான்



மலையகத்தில் எவ்வாறு வேலை திட்டங்களை முன்னெடுத்தேனோ அவ்வாறே, கிழக்கு மாகாணத்திலும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் என அம்மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (17) கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தன்னை ஆளுநராக நியமித்தமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் இதன்போது கூறினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW