மருத்துவரை தடியால் விரட்டி விரட்டி தாக்கிய எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்
கியூ.ஆர். கோட் அடிப்படையில் எரிபொருள் நிரப்ப சென்ற மருத்துவரை தாக்கிய எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை தல்ருவ எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் தனது காருக்கு எரிபொருள் நிரப்புவதற்காக மேலும் மூன்று பேருடன் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது கியூ.ஆர். கோட் வரம்பான 4 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் எரிபொருள் கோரியதால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவர் இதன்போது எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து ஊழியர் தடி ஒன்றை எடுத்துக்கொண்டு மருத்துவரை விரட்டி விரட்டி தாக்கியுள்ளார்.
சம்பவம் நடந்த போது மருத்துவருடன் சென்றிருந்த நபர்கள் அவரை தனியாக கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் ஊழியரை தாக்கியமை சம்பந்தமாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மருத்துவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் என தெரியவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
