“என் சாவிற்கு ஆசிரியரே காரணம்“ - மாணவன் எழுதி வைத்துள்ள கடிதம்!
10இல் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோவிற்குளம் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 10இல் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
“என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர்“ என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் மேலதிக விசாரணைக்காக குறித்த ஆசிரியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
