போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பும் முகவர்கள் முள்ளிநியூஸ்

போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பும் முகவர்கள்

போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கையர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பும் முகவர்கள்


போலி கல்வி சான்றிதழ்கள் உட்பட போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கையர்கள் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவது தொடர்பில் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வர எதிர்பார்த்துள்ள பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசாவை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெறுவதாக தெரரிவிக்கப்பட்டுள்ளது. 

தான் பிரித்தானியாவில் தொழில் வாய்ப்பை பெற 65 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்களை முகவர்களுக்கு வழங்கியதாக இந்த மோசடியில் சிக்கிய பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். 

தனக்கு சிறந்த ஆங்கில அறிவு இருப்பதாக காட்டுவதற்காக அவர்கள் போலி கல்வி சான்றிதல் மற்றும் ஏனைய ஆவணங்களை தயாரித்து பிரித்தானியாவுக்கான விசாவை பெற சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். தான் பிரித்தானியாவுக்கு வரும் போது அறிமுகமில்லாத 12 வயதான சிறுவனை மகன் என காட்டி பிரித்தானியாவுக்கு அழைத்து வந்ததாகவும் விமான நிலையத்திற்கு வந்த சிலர் சிறுவனை அழைத்து சென்றதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார் தொழில் புரிவதற்கு ஆங்கில மொழி அவசியமில்லை என முகவர்கள் கூறியதாகவும் பிரித்தானியாவுக்கு வந்த பின்னர் ஆங்கிலம் தெரியாமல் தான் அநாதரவானதாகவும் பெண் கூறியுள்ளார். 

பிரித்தானியாவுக்கு வரும் பெண்ணின் கணவன் மற்றும் பிள்ளைகள் என கூறி பிரித்தானியா வருவதாகவும் அதற்காக ஒருவரிடம் 50 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்கள் அறவிடப்படுவதாக மோசடியில் சிக்கிய இரண்டு ஆண்கள் தெரிவித்துள்ளனர். 

விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தும் பெணின் கணவராக அல்லது பிள்ளை என காட்டி பிரித்தானியாவுக்கு பயணமாக வேண்டும். அதனை செய்ய மறுத்தால், செலுத்திய பணம் திரும்ப கிடைக்காது என முகவர்கள் கூறினர் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். அதிகளவிலான இலங்கையர்கள் இவ்வாறு இந்த மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளதாக ஸ்கை நியூஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW