பஸ்ஸில் பயணிக்கும் போது, மாணவிகளை பாலியல் ரீதியில் ஈடுபட்ட அதிபர் கைது!
தன்னுடைய கைப்பையை மறைத்து, மாணவிகளின் மார்பகங்கள் தொட்டு, தொடைகளை தடவினார் என விசாரணைகளிருந்து தெரியவந்துள்ளது....
பாடசாலை மாணவிகளிடம் பாலியல் சேஷ்ட்டையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கம்பளை கல்வி வலயத்துக்ககுட்பட் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர், பஸ்ஸில் பயணிக்கும் போது, மாணவிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக விசாரணைகளிருந்து தெரியவந்துள்ளது.
மேலும், கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 14,15 வயதுடைய மாணவிகளிடமே அந்த அதிபர் பாலியல் சேஷ்டையை காண்பித்துள்ளார்.
52 வயதான அதிபர் கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவருடைய மனைவியும் ஆசிரியை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விரு மாணவிகளின் வாக்குமூலங்கள் மற்றும் நேரில் பார்த்த மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த அதிபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த அதிபருக்கு எதிராக கல்வி வலயத்தின் ஊடாக ஒழுக்காற்று விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
