அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு : பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக மோதல் முள்ளிநியூஸ்

அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு : பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக மோதல்







களுத்துறையில் நேற்றைய தினம் பாடாசாலை மாணவி ஒருவரின் சடலம் ரயில் பாதையில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

அதிபருக்கு எதிராக களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையினால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, அப்பகுதியில் அரசியல் அதிகாரத்திற்காகவும் அதிபர் கடுமையாக உழைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. களுத்துறையில் அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு : பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக மோதல்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW