லண்டன் பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர சம்பவம்! பொலிஸார் எச்சரிக்கை தகவல்
லண்டனில் உள்ள பூங்காவில் இளம்பெண் மர்ம நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனின் ப்ரோம்லேவில் தான் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 8:15 மணிக்கு நடந்துள்ளது.
பூங்காவில் தனியாக இருந்த பெண்ணை அணுகிய நபர் அவரிடம் தவறாக நடந்து கொண்டார்.
ஒரு கட்டத்தில் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
குற்றவாளியின் வயது 35ல் இருந்து 40க்குள் இருக்கும் என தெரிவித்துள்ள பொலிஸார் அவன் குறித்த சில அடையாளங்களையும் வெளியிட்டுள்ளனர்.
மர்ம நபர் குறித்து எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் உடனடியாக கூறும்படி பொலிஸார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
