புதிய தொழிலை ஆரம்பித்த நடிகை நயன்தாரா! தேநீர் கடை முதல் திரையரங்கம் வரை எல்லாமே இலாபம் முள்ளிநியூஸ்

புதிய தொழிலை ஆரம்பித்த நடிகை நயன்தாரா! தேநீர் கடை முதல் திரையரங்கம் வரை எல்லாமே இலாபம்



நடிகை நயன்தாரா சென்னையில் பிரபல திரையரங்கம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து விட்டு, பல தொழில்களை நடிகை நயன்தாரா செய்து வருகிறார். அதில், முதலாவதாக துபாயில் எண்ணெய் சம்பந்தப்பட்ட தொழிலில் 50 கோடி முதலீடு செய்துள்ளார். 

இதையடுத்து அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தில் தி லிப் பாம் கம்பெனி போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதன் பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அது மட்டும் இல்லை, இந்தியாவில் மிகப் பிரபலமான "சாய் வாலே"என்ற தேநீர் கடையில் முதலீடு செய்துள்ளார். 

தற்போது நயன்தாரா வட சென்னை பகுதியில் இயங்கி வந்த பழமையான அகஸ்தியா திரையரங்கத்தை சொந்தமாக வாங்கி உள்ளதாகவும், அந்த இடத்தில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கம் ஒன்றை கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதேவேளை, இது வரை ஆரம்பித்த அனைத்து தொழில்களும் நல்ல ஒரு இலாபத்தினை பெற்றுள்ளது என்பதால் இந்த தொழிலும் நயன்தாராவுக்கு வெற்றிதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW