பாடசாலை மாணவியை வீதியில் துரத்தி அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது!
யாழ்ப்பாணம் வசாவிளான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் நேற்று நண்பகல் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், அங்க சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், குறித்த மாணவி குரலெழுப்பிய நிலையில், அங்கு கூடிய பொதுமக்கள் , இராணுவ சிப்பாயை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தனர்.
தமிழ் இராணுவ சிப்பாயான குறித்த நபர் கடந்த காலத்திலும் இவ்வாறான சில்மிஷங்களில் சிக்கியிருந்தாரென கூறப்படுகிறது.
குறித்த இராணுவ சிப்பாய் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
