அவசர நிலையை கையாள வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழு
அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்றா நோய் பிரிவு மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டுள்ளதாக அந்த பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவாக, நாடளாவிய ரீதியில் உள்ள 73 வைத்தியசாலைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அல்லது டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் பதிவாகி வருகின்றது.
ஐ.டி.எச் வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, நீர்கொழும்பு பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு ஒவ்வொரு நாளும் அவதானிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
400 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் முழு நாட்டையும் உள்ளடக்கி தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் தொற்று நோய்கள் நிறுவகம் ஆகியவற்றினால் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், தற்போது அந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வார்டுகளில் பணியாற்றி வருவதாகவும் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
