சிறுமியை பௌத்த பிக்கு வன்புணர்வு முள்ளிநியூஸ்

சிறுமியை பௌத்த பிக்கு வன்புணர்வு


11 வயது சிறுமி வன்புணர்வு - பௌத்த பிக்குவுக்கு விளக்கமறியல்

 மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


கைதானவர் இன்றைய தினம் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

 வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சிறுமி 36 வயதான தமது தாயுடன் கல்கிசை பகுதியிலுள்ள சொகுசு மாடி கட்டடத்தில் இருந்துள்ளார். சிறுமியை பௌத்த பிக்கு வன்புணர்வு இதன்போது அங்கு பிரவேசித்த 62 வயதான பௌத்த பிக்கு, குறித்த சிறுமியின் தாயாருக்கு போதைப்பொருளை வழங்கி அவரை மயக்கமடைய செய்துள்ளார். 

 இதனையடுத்து, குறித்த 11 வயதான சிறுமியை பௌத்த பிக்கு வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW