திருமணத்திற்கு தயாரான யுவதி மீது அமில வீச்சு தாக்குதல் நடத்திய முன்னாள் காதலன்
இன்றைய தினம் திருமணம் செய்துக்கொள்ள தயாராக இருந்த யுவதி அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிகமை பொலிஸ் பிரிவில் மதுராகொட பிரதேசத்தை சேர்ந்த யுவதியே அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
யுவதியின் திருமண வைபவத்தை காலி பிரதேசத்தில் இன்று நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
யுவதி திருமணத்திற்கு புறப்பட்டு செல்ல வீட்டில் தயாராகி கொண்டிருந்த போதே அவர் மீது அமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் யுவதியின் வீட்டுக்குள் சென்ற நபர், யுவதி மீது அமில வீச்சு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகமை மதுராகொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
எனினும் பெற்றோரின் ஆலோசனைக்கு அமைய யுவதி காதலை துண்டித்துக்கொண்டுள்ளார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கி குறித்த இளைஞன் அமில வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
