ஆள் கடத்தல் : ஆறு பேர் கைது
பெண் மற்றும் ஆண் ஒருவரை கடத்திச் சென்ற ஆறு பேரை தாம் கைது செய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பணப்பிரச்சினை காணமாக இந்த கடத்தல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட பெண் மற்றும் ஆண் ஆகியோர் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தலுடன் சம்பந்தப்பட்ட நபர்களில் ஒருவரது காதலி, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப வழங்காத காரணமாக இந்த கடத்தல் நடந்துள்ளது.
வத்தளை மற்றும் மாகொல பிரதேசத்தை சேர்ந்தவர்களே கடத்தப்பட்டுள்ளனர்.
தமக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து பெண் மற்றும் ஆண் ஆகியோர் தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய புறப்பட்டுச் செல்லும் போது சந்தேக நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொழும்பு 10 மற்றும் கொழும்பு 9 பிரதேசங்களை சேர்ந்த 22 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
