போக்குவரத்து மருத்துவ செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்
எதிர்வரும் ஆறு மாதங்களில் குறித்த இலக்கை எட்ட முடியும்
போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சகல செயற்பாடுகளையும் டிஜிட்டல் மயமாக்கி அரசாங்கத்திற்கு வருடாந்தம் இரண்டு கோடி ரூபாவை மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிறுவனத்தின் கணினி அமைப்பை அனைத்து மாவட்ட அலுவலகங்களுடனும் ஏற்கனவே இணைத்துள்ளதாகவும் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன அபேரத்ன தெரிவித்தார்.
போக்குவரத்து மருத்துவ நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் பின்னர் மக்கள் காகித பாவனையின்றி சேவைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்த அவர், எதிர்வரும் ஆறு மாதங்களில் குறித்த இலக்கை எட்ட முடியும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன அபேரத்ன தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
