யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட :போலி நாணயத்தாள்களுடன் கைது முள்ளிநியூஸ்

யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் உட்பட :போலி நாணயத்தாள்களுடன் கைது

சந்தேகநபர்களிடம் இருந்து 5000 ரூபா நாணயத்தாள்கள் 250 மீட்கப்பட்டுள்ளது. 5000 ரூபா மற்றும் 500 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற இருவரையும் சந்தேகத்திற்கிடமான முறையில் சோதனை செய்த போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 5000 ரூபா நாணயத்தாள்கள் 250ம், 500 ரூபா நாயணத்தாளர்கள் 27ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 24 வயதுடைய யாழ். பல்கலைக்கழக மாணவர் எனவும் மற்றைய சந்தேக நபர் 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் புதுக்குடியிருப்பு மற்றும் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW