1000 ரூபாவிற்கும் குறைவான விலையில் இன்று முதல் உரம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தேவையான அளவு உரங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஓமானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், உர விநியோகம் இன்று (12) முதல் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் விவசாய சேவை நிலையங்கள் ஊடாக இந்த யூரியா உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஒரு மூட்டை யூரியா உரத்தை 1000 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நாட்களில் யூரியா உர மூட்டையின் விலை தனியாரால் அதிகரிக்கப்பட்ட போதிலும், அதன் விலையை மேலும் குறைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக உரங்களின் விலை அதிகமாக இருந்த போதிலும் தற்போது சலுகை விலையில் உரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு உறுதி செய்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
