தொல்பொருள் திணைக்களத்தை கடும்தொனியில் எச்சரித்த ரணில் - முழுமையான விபரம் உள்ளே..! முள்ளிநியூஸ்

தொல்பொருள் திணைக்களத்தை கடும்தொனியில் எச்சரித்த ரணில் - முழுமையான விபரம் உள்ளே..!

தொல்பொருள் திணைக்களத்தை கடும்தொனியில் எச்சரித்த ரணில் - முழுமையான விபரம் உள்ளே..!


வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது... இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க , 'நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ' என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார். 

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார். 

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் அதிபரிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , 'எனக்கு அதனை விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.' எனக் குறிப்பிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW