காப்புறுதி நிறுவன தலைவர் கொலை: வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..! முள்ளிநியூஸ்

காப்புறுதி நிறுவன தலைவர் கொலை: வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..!

காப்புறுதி நிறுவன தலைவர் கொலை வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..!


பத்தரமுல்ல கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவரை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. 

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலேயே குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொலை குற்றத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் நிதி மோசடிகள் வெளிப்பட்டதன் காரணமாகவே அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றத்தின் பிரதான சந்தேக நபர் மாத்தறை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றைய சந்தேக நபர்களில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர், பேருந்து ஒன்றின் உரிமையாளர் மற்றும் பேருந்து நடத்துனர் ஆகியோர் அடங்குவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW