முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து! 11 முன்பள்ளி மாணவர்கள் வைத்தியசாலையில்
யாழில் அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் இன்று(14.06.2023) காலை இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி வீதியோரமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கிய 11 முன்பள்ளி சிறுவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
