மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் குறையும் போக்குவரத்து கட்டணங்கள் முள்ளிநியூஸ்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் குறையும் போக்குவரத்து கட்டணங்கள்

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் குறையும் போக்குவரத்து கட்டணங்கள்


எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

பேருந்து கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எரிபொருள் விலை, வாகன உதிரி பாகங்களின் விலை, டயர் மற்றும் பேட்டரி விலை உள்ளிட்ட 12 வகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கடந்த கொரோனா காலத்தில் ஆசனங்களுக்கான எண்ணிக்கைகளுக்கமைய, பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட 20 சதவீத பேருந்து கட்டண உயர்வுக்கு மேலதிகமாக 10 சதவீதம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படலாம் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW