அரசாங்க நலன்புரி திட்டத்தின் தெரிவானோர் பெயர் பட்டியல்-2023

அரசாங்கத்தின் "அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களின் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் அல்லது உங்கள் உறவினர் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்..
இணையதளத்திற்கு சென்று உங்கள் மாகாணம் மற்றும் மாவட்டம் மற்றும் பிரதேச செயலக பிரிவு மற்றும் கிராம நிலதாரி பிரிவினை தெரிவு செய்து View registry என்பதை கொடுப்பதன் மூலம் விபரங்களை பார்வையிட முடியும்.
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், 40% குறைந்த வருமானம் பெறும் மக்களை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
●மிகவும் ஏழ்மையானவர்கள்.
●ஏழ்மையானவர்கள்.
●பாதிக்கப்படக்கூடியவர்கள்.
●நிலையற்ற வருமானமுடையவர்கள்.
இதில் மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ளடங்கியுள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 15,000 ரூபாவை அரசாங்கம் வழங்கவுள்ளது.
குறிப்பாக:-
அரச நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதி இருந்தும் பெயர் உள்ளடங்கப்படாது இருந்தால் அது தொடர்பில் முறையீடு செய்யலாம் அல்லது ஜூலை மாதத்திற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். முழு விபரம்:-