ஹைட்டியில் நிலநடுக்கம் - மூவரும்,வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு முள்ளிநியூஸ்

ஹைட்டியில் நிலநடுக்கம் - மூவரும்,வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு

ஹைட்டியில் நிலநடுக்கம் - மூவரும்,வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு


ஹைட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதேவேளை, நிலநடுக்கத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த நிலநடுக்கத்தின் போது பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது, ஹைட்டி மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக சுமார் 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW