கொழும்பில் பல்கலைக்கழக மாணவரொருவர் விமானப்படையினரால் கைது முள்ளிநியூஸ்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவரொருவர் விமானப்படையினரால் கைது

கொழும்பில் பல்கலைக்கழக மாணவரொருவர் விமானப்படையினரால் கைது


கொழும்பு - பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் ட்ரோன் கமராவினை பறக்கவிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நேற்றிரவு (05.06.2023) விமானப்படையினர் கைது செய்துள்ளனர். 

நுரைச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் தொடருந்து நிலையம் அருகே ட்ரோன் கமராவினை பறக்கவிட்டிருந்த நிலையில், பம்பலப்பிட்டி ஓசன் டவர் கட்டிடத்தில் அமைந்துள்ள விமானப்படை சோதனைச் சாவடியின் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்றின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவன் ட்ரோன் கமராவினை பறக்கவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவனும், ட்ரோனும் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW