எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை : அமைச்சர் உறுதி
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என உறுதியளித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றும் இன்றும் மூடப்பட்டிருந்ததுடன், மேலும் சிலவற்றில் நீண்ட வாகனங்கள் வரிசையில் நின்றன.
சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் விலை திருத்தத்தை எதிர்பார்த்து புதிதாக கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளதால் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி கூட்டுத்தாபனத்திடம் விநியோகிப்பதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் கூறினார்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத கையிருப்பை பராமரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
