14 வகை தொழிற்துறையினருக்கு இன்று முதல் அமுலாகும் புதிய வரி விதி
14 வகை தொழிற்துறையினருக்கும், 18 வயதை தாண்டியவர்களுக்கும் புதிய வரி விதியொன்று இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதன்படி மாதாந்தம் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 20,000 ரூபாவுக்கு மேல் பங்களிப்பு செய்கின்றவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு பெற வேண்டும்.
வைத்தியர்கள் , பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் உட்பட 14 வகை தொழில் வல்லுநர்கள் இதில் அடங்குகின்றனர்.
அதேபோல 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி 18 வயதை அடைந்தவர்களும் வர்த்தமானி அறிவிப்பின்படி இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
