இலங்கை வரும் வழியில் கடலில் கொட்டப்பட்ட பெருந்தொகை தங்கம் - இந்திய அதிகாரிகள் மீட்பு
இலங்கைக்கு கடத்தப்பட்ட 32 கிலோகிராம் தங்கம் கடலில் கொட்டப்பட்ட நிலையில் இந்திய பாதுகாப்பு தரப்பினர் அதனை மீட்டுள்ளனர்.
கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) மற்றும் சுங்கத்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் தங்கம் மீட்கப்பட்டது.
இந்திய மதிப்பில் 20.2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அதிகாரிகள் பின் தொடர்வகை கண்டு கடத்தல்காரர்கள் தங்கத்தை கடலில் போட்டுள்ளனர்.
எனினும், சுழியோடிகளின் உதவியுடன், இந்திய அதிகாரிகளால் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
