திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் - விலை விபரம் உள்ளே...
10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
1. பாசிப் பயறு : 325 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,225)
2. காய்ந்த மிளகாய் : 60 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,290 )
3. சிவப்பு பருப்பு : 15 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 299 )
4. சிவப்பு நாட்டு அரிசி :15ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 200 )
5. நெத்தலி : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 1,140 )
6. கோதுமை மா : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 200 )
7. சோயா மீட் : 10 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 650 )
8. சிவப்பு அரிசி : 06 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 139 )
9. கடலை : 05 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 540 )
10. வெள்ளை சீனி : 04 ரூபாவினால் விலை குறைப்பு (புதிய விலை ரூ. 225 )
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
