காதலுக்கு தாயார் எதிர்ப்பு: அக்கா - தங்கை இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை முள்ளிநியூஸ்

காதலுக்கு தாயார் எதிர்ப்பு: அக்கா - தங்கை இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை

காதலுக்கு தாயார் எதிர்ப்பு:  அக்கா - தங்கை  இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை


தமிழகத்தில் காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் கிணற்றில் குதித்து அக்கா, தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிச்சை - அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு 21 வயதில் வித்யா மற்றும் 20 வயதில் காயத்ரி என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். 

இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கோவில் திருவிழாவிற்காக சில நாட்களுக்கு முன்பு வித்யாவும், காயத்திரியும் சொந்த ஊருக்கு வந்தனர். 

இதையடுத்து அவர்கள் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அகிலாண்டேஸ்வரி, அவர்கள் 2 பேரிடமும் விசாரித்துள்ளார். 

அப்போது காங்கேயத்தை சேர்ந்த ஒரு வாலிபரை வித்யாவும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரை காயத்திரியும் காதலித்து வருவதாக கூறியுள்ளனர். மகள்களின் காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து, அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 2 பேரையும் அகிலாண்டேஸ்வரி கண்டித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் கண்டித்ததால் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அக்கா - தங்கையின் செல்போனை கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW