சென்னையில் வசித்து வந்த குடும்பத்தினர் கேரளாவில் தற்கொலை முள்ளிநியூஸ்

சென்னையில் வசித்து வந்த குடும்பத்தினர் கேரளாவில் தற்கொலை

சென்னையில் வசித்து வந்த குடும்பத்தினர் கேரளாவில் தற்கொலை


தமிழ் நாட்டின் சென்னையில் குடியேறி வசித்து வந்த மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குடும்பத்தினர், கேரளா மாநிலத்தின் மத்திய மாவட்டமான திரிச்சூரில் உள்ள ஹொட்டல் அறை ஒன்றில் இறந்து கிடந்த இன்று (8) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஒரு ஆண், அவரது மனைவி மற்றும் அவர்களது மகள் ஆகியோர் அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் குடும்பத்தினர் ஹொட்டலுக்கு வந்து தங்கியுள்ளனர். நேற்றிரவு அறையில் இருந்து காலி செய்வதாக குடும்பத்தினர் ஹொட்டல் ஊழியர்களிடம் கூயிருந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் சென்று பலமுறை அவர்களை அழைத்த போதிலும் எந்த பதிலும் வராததால், ஹொட்டல் ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸார் உடனடியாக ஹொட்டலுக்கு சென்று அறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர்.

இந்த மரணங்கள் தற்கொலை என பொலிஸார் முடிவுக்கு வந்துள்ளனர். அறையில் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டைகளின்படி, அவர்கள் சென்னையில் வசித்து வந்துள்ளனர் எனவும் கேரளாவில் அவர்களின் சொந்த இடத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். உடல்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், நிதிப் பிரச்சினைகள் அவர்களை இந்த மோசமான முடிவை எடுக்க தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW