மருத்துவமனையின் சீறிவிழும் மருத்துவர் நிர்க்கதியில் சிகிச்சை பெறுவோர் முள்ளிநியூஸ்

மருத்துவமனையின் சீறிவிழும் மருத்துவர் நிர்க்கதியில் சிகிச்சை பெறுவோர்

மருத்துவமனையின் சீறிவிழும் மருத்துவர் நிர்க்கதியில் சிகிச்சை பெறுவோர்
கொழும்பு லேடிரிஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் சகவைத்தியர்களிடம் சீறிவிழும் சம்பவம் தொடர்பில் குறித்து சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

 குறிப்பிட்ட பெண் வைத்தியருடன் இணைந்து பணியாற்றும் வைத்தியர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த வைத்தியருடன் பணிபுரியும் மருத்துவர்கள், இதன்காரணமாக கடமைக்கு சமூகமளிக்கவில்லை இது சிகிச்சை பெறும் குழந்தைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நியாயமற்ற நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்நிலையில் நான் அவர்களை பணிக்கு திரும்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் இது குழந்தைகளின் உயிர் தொடர்புபட்டது எனவும் வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை குறிப்பிட்ட மருத்துவரிற்கு எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவது இது முதல்தடவையில்லை என அரசமருத்துவ சங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW