வடக்கு மாகாண சபைக்கு காணி அல்லது காவல்துறை அதிகாரம் முள்ளிநியூஸ்

வடக்கு மாகாண சபைக்கு காணி அல்லது காவல்துறை அதிகாரம்

வடக்கு மாகாண சபைக்கு காணி அல்லது காவல்துறை அதிகாரம்


அதிபர் ரணிலுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப்பிரதமர் மோடியை சந்திப்பதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை வடக்கு மாகாண சபைக்கு காணி அல்லது காவல்துறை அதிகாரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக 

அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளன. அதற்காக மாகாண சபை முதலமைச்சர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் அடங்கிய அறிக்கைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

வடமாகாண சபை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவது குறித்து வினவியபோது, எந்தப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கத்தின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும், அதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் கூறினார். அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய விஜயத்தின் பின்னர் இந்தியப் பிரதமரையும் சந்திக்க உள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW