ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துகிறேன் நடிகர் கலன குணசேகர முள்ளிநியூஸ்

ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துகிறேன் நடிகர் கலன குணசேகர

ஜனாதிபதிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துகிறேன் நடிகர் கலன குணசேகர


நெருக்கடிக்குள் இருந்த நாட்டை விழ விடாது பற்றிக்கொண்டமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துவதாக நடிகர் கலன குணசேகர தெரிவித்துள்ளார். 

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவரை இதுவரை உலகில் எங்கும் பார்த்ததில்லை. 

இந்தளவுக்கு பொறுமையான குணம் கொண்ட தலைவர் என்ற வகையில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் எனவும் கலன குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

கலன குணசேகர கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போராட்டத்தின் போது சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW