காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்ட நபர்
மெனிக்கின்ன பொலிஸ் பிரிவில் கல்கடுவ பிரதேசத்தில் காட்டுப்பகுதியில் வெடிப்பொருள் ஒன்றை வெடிக்க செய்து ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்கஸ்லந்த லுணுகெட்டியாமடித்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
காதல் தொடர்பு முறிந்த காரணத்தினால், மனமுடைந்து இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மெனிக்கின்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
