ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு அமைச்சர் வெளியிட்ட காரணம்
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாகவே டொலரின் பெறுமதி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிந்து வரும் நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதனை மத்திய வங்கி கவனித்துக்கொள்ளும் எனவும், டொலர் விலை வழங்கல் மற்றும் தேவையால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை தொடர்பான சமீபத்திய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்றைய (15) கொள்முதல் விலை 311.60 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை விலை 328.92 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை இன்று (15) அதிகரித்துள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
