மதுபான தன்சல் : ஆறு இளைஞர்கள் கைது முள்ளிநியூஸ்

மதுபான தன்சல் : ஆறு இளைஞர்கள் கைது

மதுபான தன்சல் : ஆறு இளைஞர்கள் கைது


பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான தானசால் காட்சியை டிக்டொக்கில் பதிவேற்றம் செய்து மதுவை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்களை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 20 - 25 வயதுக்கு உட்பட்ட ஆறு பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் குறித்த வீடியோ தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேநீரை ஊற்றியதாகவும் டிக்டொக்கில் வீடியோ தயாரிப்பதற்காக இந்தச் செயலை செய்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW