யுவதியின் தந்தையும்,சகோதரனையும் வெட்டிப் படுகொலை-காதலன்! முள்ளிநியூஸ்

யுவதியின் தந்தையும்,சகோதரனையும் வெட்டிப் படுகொலை-காதலன்!

யுவதியின் தந்தையும்,சகோதரனையும் வெட்டிப் படுகொலை-காதலன்!


அநுராதபுரம் - கெக்கிராவை பிரதேசத்தில் தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலேயே தந்தையும், மகனும் இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கெக்கிராவை பிரதேசத்தில் இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர், அப்பிரதேசத்திலுள்ள ஓட்டோ சாரதியான இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். 

 இதற்குக் மாணவியின் தந்தையும், சகோதரரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25-06-2023) மாலை தனது காதலியின் வீட்டுக்கு ஓட்டோவில் சென்ற காதலன், காதலியை வலுக்கட்டாயமாகத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது காதலன் மீது காதலியின் தந்தையும், சகோதரரும் கொட்டன்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த காதலன், தனது ஓட்டோவில் மறைத்து வைத்திருந்த வாளால் காதலியின் தந்தைதையும், சகோதரரையும் சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து ஓட்டோவில் தப்பியோடியுள்ளார். 

இச்சம்பவத்தில், 53 வயதுடைய காதலியின் தந்தை நேற்று (25) மாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய காதலியின் சகோதரர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26) மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞரைக் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW