ருமேனியா செல்லவிருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
June 27, 2023
All News
,
Government
,
Peoples
,
Sri Lanka
,
World
இதன்போது ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் இலங்கை தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்காக ருமேனிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் Traian Hristea (டிரேயன் ஹிரிஸ்டியா) இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, 2016 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையர்களுக்கு மிகவும் பிரபலமான வேலைத் தளமாக ருமேனியா இருந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்ததார்.
இதேவேளை, ஆடை, கட்டுமானம், ஹோட்டல், விவசாயம் ஆகிய துறைகளில் 32,000க்கும் மேற்பட்ட இலங்கை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ருமேனியா தற்போது பாரிய உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி வருவதால், இலங்கையர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ருமேனிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கல்வி, விவசாயம், ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவு நாட்டுக்கு தேவை எனவும் வலியுறுத்தியிருந்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
