போதையில் பொலிஸ் நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட அமைச்சரின் சாரதி கைது முள்ளிநியூஸ்

போதையில் பொலிஸ் நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட அமைச்சரின் சாரதி கைது

போதையில் பொலிஸ் நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட அமைச்சரின் சாரதி கைது


மதுபோதையில் வாகனம் ஓட்டிச்சென்று நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அமைச்சர் ஒருவரின் சாரதியாக கடமையாற்றுவதாகவும், மதுபோதையில் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாகனத்தை ஓட்டிச்சென்றதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து அமைச்சரின் சாரதியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அமைச்சரின் உத்தியோகபூர்வ வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்திய போது அமைச்சர் வாகனத்தில் பயணிக்கவில்லை எனவும் அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இதன்போது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைச்சரின் சாரதியும் பொலிஸ் கான்ஸ்டபிளும் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரகளை செய்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இது குறித்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது தனிப்பட்ட குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW