வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை! ஒருவர் கைது முள்ளிநியூஸ்

வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை! ஒருவர் கைது

வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை! ஒருவர் கைது


வவுனியா கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் ‘Pregabalin’ மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

300 மாத்திரைகள் விற்பனை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 300 போதை மாத்திரைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் வவுனியாவை சேர்ந்த 41 வயதுடையவர் என்றும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW